21st April 2025 11:08:31 Hours
35 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் விடிஎஸ் பெரேரா அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் விடிஎஸ் பெரேரா அவர்கள் 1990 நவம்பர் 03 ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் பாடநெறி 08 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். அவர் ரத்மலான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், 1992 நவம்பர் 14 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். பின்னர் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 மே 03 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
தனது பணிக்காலத்தில் அவர், 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் குழு தளபதி, 7 வது மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரி கட்டளை, 211 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 3 (நிர்வாகம் மற்றும் வளங்கள்), அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பயிற்சி பாடசாலையின் பயிற்றுவிப்பாளர், 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் (ஆர்எப்டி) இரண்டாம் கட்டளை அதிகாரி, கிளிநொச்சி மேம்பட்ட காலாட் படை பயிற்சி குழுவின் தலைமை பயிற்றுவிப்பாளர், 51 வது காலாட் படைப்பிரிவின் பதில் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி, 68 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (பொது பணிநிலை), 574 வது காலாட் பிரிகேடின் பதில் தளபதி, 573 வது காலாட் பிரிகேடின் பதில் தளபதி, 642 வது காலாட் பிரிகேட் தளபதி, 533 வது காலாட் பிரிகேட் தளபதி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் (பொதுப் பணிநிலை), கௌரவ ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் (இராணுவ தொடர்பு) மற்றும் 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளை வதித்துள்ளதுடன், 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக தற்போது கடமையாற்றுகிறார்.
இந்த சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பாடநெறி (இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள்கள் நிதியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது), இந்தியாவில் இளம் அதிகாரிகள் பாடநெறி, பாகிஸ்தானில் அனைத்து ஆயுத கள பொறியியல் மற்றும் நீர் முகாமைத்துவ அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் இந்தியாவில் சிரேஷ்ட கட்டளை பாடநெறி ஆகிய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை கற்றுள்ளார்.
ஓரியண்ட் கல்வியற் கல்லூரி லிமிடெட் நடாத்தும் அறிவார்ந்த நிர்வாகிகளுக்கான தகவல் தொழில்நுட்பச் சான்றிதழ், ஐடிஎம் கணினி ஆய்வுகள் தனியார் நிறுவனத்தில் கணினி பயன்பாட்டு சான்றிதழ், இந்தியா தேவி அஹில்யா விஸ்வவித்யாலயாவில் உயர் நிலை பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பாதுகாப்பு கற்கை பட்டம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ முதுகலை நிறுவனத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் உள்ளிட்ட உயர் கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளை சிரேஷ்ட அதிகாரி பெற்றுள்ளார்.