17th April 2025 16:11:00 Hours
நேபாளம் காத்மாண்டுவில், 2025 மார்ச் 30 முதல் ஏப்ரல் 1ம் திகதி வரை ஸ்திரத்தன்மை தொடர்பாக தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் கொன்ராட் அடினாயர் ஸ்டிப்டுங் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கேணல் எம்பிபிஎன் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் பங்கேற்றார்.
கொந்தளிப்பான உலகில் தெற்காசியாவின் உறுதிப்பாடு: பிராந்திய மீள்தன்மையை வடிவமைப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கலந்து கொண்டனர். காலநிலையால் ஏற்படும் அபாயங்கள், பொருளாதார உறுதியற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்ற பிராந்திய சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் வலியுறுத்தினார். ராஜதந்திரம், பாதுகாப்பு ஆய்வுகள் மூலம் தெற்காசியாவின் மீள்தன்மையை ஆதரிப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் மாநாட்டில் அவர் நேபாள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டு நிறுவனம் மற்றும் காத்மண்டு பல்கலைக்கழக முகாமைத்துவ பாடசாலையின் அறிஞர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி, காலநிலை பாதுகாப்பு மற்றும் மூலோபாய மீள்தன்மை தொடர்பாக விரிவுரைகளை வழங்கினார். இந்த விவாதங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச மூலோபாய உரையாடலுக்கான மையமாக நேபாளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.