21st April 2025 12:07:13 Hours
213 வது காலாட் பிரிகேட் “ஏரபது உதானய 2025” என்ற தலைப்பில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வை 2025 ஏப்ரல் 05, அன்று கொண்டாடியது. இந்த நிகழ்வில் கயிறு இழுத்தல், தலையணை சண்டை, புத்தாண்டு அழகு ராஜா தெரிவு செய்தல் போன்றவையுடன் நிகழ்விற்கு மேலும் வண்ணத்தையும் முக்கியத்துவத்தையும் சேர்க்கும் வகையில் கலாசார நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றன.
213 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீஎம் டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
அத்துடன், 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி தல்லடி முகாம் வளாகத்தில் புத்தாண்டு விழாவை நடாத்தினர்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
59 வது காலாட் படைப்படைப்பிரிவு எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், முல்லைத்தீவு மற்றும் கோகிலாய் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக "சிகிதி புத்தாண்டு நிகழ்வை" (சிறுவர் புத்தாண்டு) 2025 ஏப்ரல் 5, அன்று அளம்பில் கிரீன் ஜெக்கெட் ஹொலிடே விடுதியில் ஏற்பாடு செய்திருந்தது.
“தூய இலங்கை” திட்டத்துடன் இணைந்து, இளைய தலைமுறையினரிடையே நல்லிணக்கம், கலாசாரம் மற்றும் சமூக ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் சிற்றுண்டி வழங்கல் போன்றன இடம்பெற்றன. இந்நிகழ்வு அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கியது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. மகேஷ் ஜயவர்தன, மனுசத் தெரண திட்டத்தின் தலைவர், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 56 வது காலாட் படைப்பிரிவு 2025 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி வவுனியா நகரசபை மைதானத்தில் கொண்டாடியது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் திருமதி ஜீஏ குலதுங்க மற்றும் வவுனியா மாவட்டத்தின் செயலாளர் திரு. பீஏ சரத்சந்திர ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நாள் பல்வேறு பாரம்பரிய, கலாசார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. இதில் மரதன் ஓட்டம், புத்தாண்டு இளவரசர் மற்றும் இளவரசி தேர்வு, சறுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், தலையணை சண்டை மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் அடங்கியிருந்தது.
நெஸ்லே லங்கா தனியார் நிறுவனம் வழங்கிய பரிசுகள் மற்றும் வவுச்சர்களின் அனுசரணையால் விழா மேலும் மெருகூட்டப்பட்டது.
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 59 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 ஏப்ரல் 19 ஆம் திகதி முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் அவரது துணைவியர் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.