16th April 2025 23:48:43 Hours
221 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழுள்ள 20 வது கஜபா படையணி, சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, புல்மோட்டை படையலகு தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 12 ஆம் திகதி சமூக நலத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இத்திட்டம் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 221 வது காலாட் பிரிகேட் தளபதியின் ஒருங்கிணைப்பில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான திரு. சமீர குணரத்ன அவர்களினால் இத்திட்டத்திற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
அத்துடன், படையலகு பிரதேசத்திற்குற்பட்ட பரணமதவச்சி மற்றும் தென்னமரம்வாடிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.5,000.00ம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நலன்புரி முயற்சியின் வெற்றிக்காக 03 அதிகாரிகள், 20 சிப்பாய்கள் மற்றும் ஒரு பொது சுகாதார பேறுகால மருத்துவச்சி செயற்பட்டதுடன், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பயனடைந்தனர். அனைவருக்கும் வழங்கப்பட்ட மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.