16th April 2025 23:49:26 Hours
கிழக்கு பாதுகாப்புப் படையின் கட்டளையின் கீழுள்ள படைப்பிரிவுகளுக்கான கருத்தரங்குகள் 2025 ஏப்ரல் 3, 4, 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்றன. இலங்கை இராணுவத்தின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு என்ற கருப்பொருளின் கீழ், “மினி ஈஸ்டர்ன் சென்டினல் 2025” கருத்தரங்கு 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி 23 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது. 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஸ் சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
24 வது காலாட் படைப்பிரிவின் கருத்தரங்கு 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அன்று அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதில் அதிகாரிகளின் மூலோபாய மனநிலை மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவர்களின் தயார்நிலையை உறுதி செய்தல் ஆகியவை நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்த நிகழ்வில் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.
22 வது காலாட் படைப்பிரிவிற்கான கருத்தரங்கு 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி 22 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தில் நடைபெற்றது. இது அதிகாரிகளின் மூலோபாய மனநிலையையும் தொழில்முறை நிபுணத்துவத்தையும் மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் பாதுகாப்பு நிலப்பரப்பில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவர்களின் தயார்நிலையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த நிகழ்விற்கு 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிஎல்எஸ்எல் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் தலைமை தாங்கினார்.
கிழக்கு வழங்கல் கட்டளைக்கான கருத்தரங்கு 2025 ஏப்ரல் 06 ஆம் திகதி 3 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி கேட்போர்கூடத்தில், கிழக்கு வழங்கள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்என் விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வு, அதிகாரிகளின் மூலோபாய மனநிலையையும் தொழில்முறை நிபுணத்துவத்தையும் மேம்படுத்துவதையும், எதிர்கால வழங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள அவர்களின் தயார்நிலையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த கருத்தரங்குகள் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு வழங்கல் கட்டளைத் தளபதி மற்றும் அதன் கீழுள்ள கட்டளை படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில் நடைபெற்றன.