Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2025 13:07:46 Hours

10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் பாடசாலை பொருட்கள் நன்கொடை

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி படையலகு வளாகத்தில் பாடசாலை பொருட்கள் வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, மன்னார்/பலாக்குளி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 29 மாணவர்களுக்கு பாடசாலை பை மற்றும் பயிற்சி புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரண பொதிகள் வழங்கப்பட்டன. மல்வத்து பிரிவின் வண. மாபகட பஞ்சசார தேரர், திருமதி. சமீலா பிரியதர்ஷனி மற்றும் திரு. வத்சல கருணாதிலக்க ஆகியோரின் உதவியினால் இந்த நன்கொடை திட்டம் சாத்தியமானது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலையின் அதிபர், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.