11th April 2025 13:08:19 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வவுனியா தள வைத்தியாசலையின் இரத்த வங்கியின் ஆதரவுடன், படைப்பிரிவு தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 02 ஆம் திகதி அன்று இரத்த தான முகாம் நடாத்தப்பட்டது.
56 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள படையலகுகளைச் சேர்ந்த மொத்தம் 159 நன்கொடையாளர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.
இந்த முயற்சி வவுனியா தள வைத்தியாசலையின் இரத்த வங்கியின் மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதில் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்கிறது.