22nd April 2025 11:18:35 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 ஏப்ரல் 09 அன்று தியதலாவை முத்து குமாரு மைதானத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சம்பிரதாய மங்கள விளக்கேற்றலுடன் கொண்டாட்டம் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து நெடுந்தூர ஓட்டம், சறுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல், தடை தாண்டும் ஓட்டம், புத்தாண்டு அழகு ராஜா மற்றும் அழகு ராணி தேர்வு மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன. நிகழ்வின் முடிவில், வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
122 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பிடிடீடி ஜயரத்ன பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 122 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 ஏப்ரல் 19 அன்று பிரிகேட் தலைமையக மைதானத்தில் புத்தாண்டு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.