Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th April 2025 13:23:39 Hours

14 வது காலாட் படைப்பிரிவின் 14 வது ஆண்டு நிறைவு விழா

14 வது காலாட் படைப்பிரிவு அதன் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஏப்ரல் 06 ஆம் திகதி 14 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது.

ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு களனி ராஜமஹா விஹாரையில் போதி பூஜை நடைபெற்றது. அதே போன்று 2025 மார்ச் 25 ஆம் மருதானை இந்து கோயில் மற்றும் அன்னை பாத்திமா தேவாலயத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவ மத அனுஷ்டானங்கள் நடைபெற்றன.

ஆண்டு நிறைவு நிகழ்வின் ஒரு பகுதியாக, மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் இரத்த தான திட்டம் நடத்தப்பட்டது. மேலும், அதே மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பெறும் பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.