14th April 2025 10:37:46 Hours
34 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வயவிலான்-பலாலி பிரதான வீதி 2025 ஏப்ரல் 10, அன்று உத்தியோகபூர்வமாக பொது பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ், அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தொடர்ந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இவ் வீதி திறக்கப்பட்டது..
உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் இராணுவ நிறுவனங்கள் வழியாகச் செல்லும் இந்த வீதி, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இவ்வீதி மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், பொதுமக்கள் இப்போது வயவிலனில் இருந்து விமான நிலையத்திற்கு மிகவும் இலகுவாக பயணிக்க முடியும். அத்துடன் அந்தோணிபுரம் மற்றும் மைலிட்டியில் வசிப்பவர்கள் வசதியாக வயவிலனுக்கு மற்றும் காங்கேசன்துறை விமான நிலையத்திற்கு பயணிக்க முடியும்..