10th April 2025 13:19:39 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் மகளிர் படையினர், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஏப்ரல் 04, அன்று பொரெல்ல படையணி தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடினர்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஏஸ்சீ, இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சசிதா ஹேவகே ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், கயிறு இழுத்தல், விநோத உடை, யானைக்கு கண் வைத்தல் மற்றும் புத்தாண்டு அழகு ராணி தேர்வு போன்ற பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் இடம்பெற்றன.
இலங்கை சிங்க படையணி படையினர் 2025 ஏப்ரல் 6 ஆம் திகதி, அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் 'பக்மஹா உலேல' நிகழ்வை இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் கொண்டாடினர்.
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேகே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ மற்றும் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.