10th April 2025 18:31:32 Hours
இலங்கைக்கான மாலைத்தீவின் பாதுகாப்பு ஆலோசகரும், ஆவுஸ்திரேலியாவிற்கு அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகருமான கேணல் ஹசன் அமீர், இன்று (ஏப்ரல் 10) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.