10th April 2025 12:56:25 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் படையணிகளுக்கு இடையிலான கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2025 மார்ச் 28 ஆம் திகதி பனாகொட இலங்கை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஆண்கள் பிரிவில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சாம்பியன்ஷிப்பை பெற்றதுடன், இலங்கை சிங்க படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பெண்கள் பிரிவில், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சாம்பியன்ஷிப்பை பெற்று கொண்டதுடன், 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி இரண்டாம் இடத்தை தனதாக்கி கொண்டது.
பிரிவுகளுக்கிடையிலான போட்டியில், பொறியியல் சேவை படையணி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
சாதனையாளர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கலுடன் நிகழ்வு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி நன்றியுரையாற்றினார்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, வழங்கல் கட்டளைத் தளபதியும் இராணுவ கரப்பந்து குழுவின் தலைவர், 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
போட்டியாளர்களின் தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு:
சுப்பர் சுற்றுப் போட்டி
ஆண்கள் பிரிவு
சிறந்த பந்து பறிமாற்றம்: லான்ஸ் கோப்ரல் ஜஎமசீ மிஹிரான் - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
சிறந்த பெறுநர்: காலாட் சிப்பாய் கேஎம்எஸ் சமன் குமார - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
சிறந்த அமைப்பாளர்: காலாட் சிப்பாய் ஆர்ஜீஜீடிஏ யப்பா - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
சிறந்த தடுப்பாளர்: கோப்ரல் எச்எஸ்எம் சில்வா - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
சிறந்த பாதுகாவலர்: காலாட் சிப்பாய் ஏடி அமரசிங்க - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
சிறந்த அறைதல்: லான்ஸ் கோப்ரல் கேசீ சந்தருவன் - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
சிறந்த வீரர்: காலாட் சிப்பாய் டிகேஆர்பீ அபேசிங்க - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
பெண்கள் பிரிவு
சிறந்த பந்து பறிமாற்றம்: லான்ஸ் கோப்ரல் எம்எஸ்ஏஎஸ் செனவிரத்ன - இலங்கை இராணுவ மகளிர் படையணி
சிறந்த பெறுநர்: லான்ஸ் கோப்ரல் டிஏஎம்ஐ பாலசூரிய - இலங்கை இராணுவ பொது சேவை படையணி
சிறந்த அறைதல்: லான்ஸ் கோப்ரல் கேஜீசீஎம் வீரசிங்க - இலங்கை இராணுவ மகளிர் படையணி
சிறந்த தடுப்பாளர்: லான்ஸ் கோப்ரல் எல்ஆர்கேடி விஜயகோன் - இலங்கை இராணுவ பொது சேவை படையணி
சிறந்த பாதுகாவலர்: லான்ஸ் கோப்ரல் டிஎம்பிஏ பண்டார - இலங்கை இராணுவ பொது சேவை படையணி
சிறந்த அமைப்பாளர்: லான்ஸ் கோப்ரல் எம். தமிழ் செல்வி - இலங்கை இராணுவ பொது சேவை படையணி
போட்டியின் சிறந்த வீராங்கனை: லான்ஸ் கோப்ரல் ஜேபிஏ மதுரிகா - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி
'ஏ' பிரிவு
சிறந்த பந்து பறிமாற்றம்: சிப்பாய் எம்பிஎஸ் ஜயசேகர – பொறியியல் சேவைகள் படையணி
சிறந்த பெறுநர்: லான்ஸ் கோப்ரல் டபிள்யூஏடிஎம்எஸ் விக்ரமசேன - பொறியியில் சேவைகள் படையணி
சிறந்த அமைப்பாளர்: லான்ஸ் கோப்ரல் டிஎம்பீ லஹிரு - பொறியாளர் சேவைகள் படையணி
சிறந்த தடுப்பாளர்: பிரைவேட் எச்.டி.என்.என்.டி சில்வா - இலங்கை இராணுவ பொது சேவை படையணி
சிறந்த பாதுகாவலர்: லான்ஸ் கோப்ரல் ஆர்எச் சில்வா - இலங்கை இராணுவ பொது சேவை படையணி
சிறந்த அறைதல்: சிப்பாய் ஜேஎச்பிஎன். பௌத்தானந்த - இலங்கை இராணுவ பொது சேவை படையணி
போட்டியின் சிறந்த வீரர்: லான்ஸ் கோப்ரல் எம்ஏடி தரங்க - பொறியியல் சேவைகள் படையணி