Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2025 13:23:39 Hours

மண்சரிவால் தடைபட்ட ரயில் பாதை படையினரால் சீரமைப்பு

பதுளை-கொழும்பு ரயில் பாதையில் 2025 ஏப்ரல் 6 அன்று இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா இடையே கனமழை காரணமாக தண்டவாளங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 112 வது காலாட் படைப்பிரிவின் 23 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 ஏப்ரல் 07, அன்று தடையை அகற்றி ரயில் போக்குவரத்து நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.