10th April 2025 13:00:39 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 08 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த இராணுவ தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி (பதில்) மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர். இராணுவ மரபுகளின்படி, நுழைவாயிலில் தளபதிக்கு சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், கெப்டன் சாலிய அலதெனிய அவர்களின் நினைவு தூபியில் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற விழாவில், இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சிஅவர்களுடன் இராணுவ தளபதி கலந்து கொண்டார்.
பின்னர், அணிவகுப்பு சதுக்கத்தில் இலங்கை பீரங்கிப் படையணி படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை இராணுவத் தளபதி பார்வையிட்டார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ரெண்டெஸ்வஸ் கிரிக்கெட் மைதானத்தை இராணுவத் தளபதி திறந்து வைத்தார். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இராணுவ தளபதி கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.