Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2025 00:13:13 Hours

9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் சிவில் சமூகத்திற்கான நீர் சுத்திகரிப்பு நிலையம்

233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், சமீபத்தில் மகாசென்புர கிராமத்தில் நீர் வழங்கல் திட்டத்தை நிறுவினர்.

சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன், இந்த திட்டம் 2025 ஏப்ரல் 03 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ,ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சி, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 233 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.