Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2025 08:41:51 Hours

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் பீ.ஐ பத்திரத்ன (ஓய்வு) காலமானார்

கெமுனு ஹேவா படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் பீ.ஐ பத்திரத்ன (ஓய்வு) 2025 மார்ச் 29 அன்று நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிறிது கால சுகயீனம் காரணமாக காலமானார். அவர் மரணமடையும் போது அவருக்கு வயது 59 ஆகும்.

அவரது சிறப்பான சேவையும், கடமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் இராணுவம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதுடன் புதிய முன்னேற்றங்களுக்கு வழி வகுத்தது. மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் உடல் 2025 மார்ச் 30 அன்று பிற்பகல் 0200 மணி முதல் ஜயரத்ன மலர் சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அவரது இறுதிச் சடங்குகள், முழு இராணுவ மரியாதையுடன், 2025 மார்ச் 31 அன்று மாலை 4:30 மணிக்கு பொரளை பொது மயான தகனக்கூடத்தில் நடைபெறும்.