26th March 2025 20:12:13 Hours
கற்பித்தல் முறைமை பாடநெறி எண் 79 அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் 2025 மார்ச் 25 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பல்வேறு இராணுவ படையணிகளைச் சேர்ந்த 167 சிப்பாய்கள் இப்பாடநெறியில் பங்கேற்றனர். போர் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் பீ.ஐ. புஞ்சிஹேவா அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இறுதி உரையை நிகழ்த்தினார்.
2 வது கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் பீ.பீ.எல். புத்திக்க அவர்களுக்கு பாடநெறியின் சிறந்த மாணவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.