24th March 2025 17:10:13 Hours
16வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட உள்ளது. கஜபா படையணியின் அணிவகுப்பு மைதானத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு, அவர்கள் 2025 மார்ச் 22 ஆம் திகதி சம்பிரதாயங்களுக்கமைய மரியாதை செலுத்தினர்.
வருகை தந்த பிரதம அதிதியை, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், கஜபா படையணி படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையில் மரியாதையை நுழைவாயிலில் பெற இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பிரதம அதிதி சம்பிரதாய அணிவகுப்பை பார்வையிட்டார்.
ஐ.நா. பணிக்கான, இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் தயார்நிலையைக் குறிக்கும் வகையில், இராணுவத் தளபதி, தேசியக் கொடி, ஐக்கிய நாடுகள் சபைக் கொடி, இராணுவக் கொடி மற்றும் கஜபா படையணியின் கொடிகளை சம்பிரதாயமாக இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவில் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த 125 இராணுவ வீரர்கள் உள்ளனர். இதில் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் அடங்குவர். இலங்கை இராணுவ கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வைஎஸ்எச்என்பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் குழுவின் கட்டளை அதிகாரியாகவும், இராணுவ புலனாய்வு படையணியின் லெப்டினன் கேணல் பிஎம்எஐயூ ஒபயசேன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2ம் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றுவார்கள்.
சம்பிரதாய அணிவகுப்பை தொடர்ந்து, இராணுவத் தளபதி, லெபனானில் பணியாற்றும் போது ஐ.நா. விதிமுறைகள், இராணுவச் சட்டம் மற்றும் இலங்கை இராணுவத்தின் முக்கியத்துவத்தை பின்பற்றி, நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூகத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இராணுவ வீரர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பின்னர் 16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் படையினர் அன்றைய பிரதம விருந்தினருடன் குழுப்படம் எடுத்துகொண்டனர். அதன் பின்னர் இராணுவத் தளபதி, பாதுகாப்பு படைக் குழுவினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
அன்றைய நிகழ்வுகளின் முடிவில், கஜபா படையணியின் படைத் தளபதி, இராணுவத் தளபதி புறப்படுவதற்கு முன்பு அவருக்கு சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் படையினரின் குடும்பத்தினர் அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.