24th March 2025 09:00:49 Hours
விஷேட படையணியின் படையினர் 2025 மார்ச் 18 ஆம் திகதி வெளிச்செல்லும் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களுக்கு விஷேட படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை, விஷேட படையணியின் நிலைய தளபதி மரியாதையுடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நுழைவாயிலில் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை சிரேஷ்ட அதிகாரி பார்வையிட்டார்.
படையினருக்கு உரையாற்றிய வெளிச்செல்லும் படையணியின் படைத் தளபதி, தனது பணிக்காலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து நிலையினருக்கும் நன்றி தெரிவித்தார்.
விஷேட படையணியின் அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்ற இரவு உணவு விருந்துபசாரத்தின் போது, இராணுவம் மற்றும் விஷேட படையணி ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய அயராத சேவையைப் பாராட்டி, வெளிச்செல்லும் படையணியின் படைத் தளபதிக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன. விஷேட படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பிரியாவிடை வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.
விஷேட படையணியின் படைத் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எம்.டி.ஐ மகாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.