25th March 2025 09:11:08 Hours
மேஜர் ஜெனரல் எம்.டி.ஐ. மகாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் விஷேட படையணியின் 15 வது படைத் தளபதியாக 2025 மார்ச் 21 ஆம் திகதி நாவுல படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய புதிய படையணியின் படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அன்றைய நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.
மேஜர் ஜெனரல் எம்.டி.ஐ. மகாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தற்போது இராணுவத் தலைமையகத்தில் போர் கருவி பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வருகிறார்.