22nd March 2025 10:23:28 Hours
உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் குறித்த இரண்டு நாள் பட்டறை 2025 மார்ச் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் ஒருங்கிணைப்புடன் நடாத்தப்பட்டது.
பட்டறையை திரு. லாயிட் கில்லட் (சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி) மற்றும் திரு. சன்னா ஜயவர்தன (ஆயுத மற்றும் பாதுகாப்புத் திட்ட ஆலோசகர்) ஆகியோர் நடாத்தினர். இந்த நிகழ்ச்சித்திட்டம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.