22nd March 2025 10:24:19 Hours
மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 26 வது தளபதியாக 2025 மார்ச் 19, அன்று கடமையேற்றார்.
வருகை தந்த அவருக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், போர் வீரர்கள் நினைவு தூபிக்கு மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சம்பிரதாயங்களை தொடர்ந்து புதிய தளபதி, படையினருக்கு உரையாற்றுகையில் தனது தொலைநோக்கு பார்வையை விளக்கியதுடன் அவர்களின் அர்ப்பணிப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.