Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2025 16:45:54 Hours

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் வெளிசெல்லும் தளபதிக்கு பிரியாவிடை

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர், வெளிசெல்லும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் விழாவை 2025 மார்ச் 16 அன்று நடத்தினர்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தில் மலர்வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியின் படையினரால் அணிவகுப்பு மரியாதையை வழங்கப்பட்டது.

பதவி விலகும் தளபதி தனது உரையில், பிராந்தியத்தில் அமைதியான சூழலுக்கும் வலுவான சிவில்-இராணுவ ஒருங்கிணைப்புக்கும் பங்களித்த அனைத்து அணியினரின் தொழில்முறை மற்றும் சேவைக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, அனைத்து நிலையினரதும் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட வசதியான "செனுரா" விடுமுறை விடுதியை தளபதி திறந்து வைத்தார். மேலும் அனுசரனையாளர் திரு. சேனக ரோட்ரிகோ வன்னி இராணுவ கள மருத்துவமனைக்கு மருத்துவமனை பொருட்களை நன்கொடையாக வழங்கினார்.