18th March 2025 17:02:39 Hours
தூய இலங்கை திட்டத்திற்கமைய 543 வது காலாட் பிரிகேட்டினரால், 543 காலாட் பிரிகேட் தளபதி கேணல் எச்.எஸ்.டபிள்யூ.கே கல்ஹேனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மார்ச் 14 ம் திகதியன்று கொழும்பு சாந்தி சமூக அனிமேஷன் இயக்கத்துடன் இணைந்து, தலைமன்னாரில் உள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 100 மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்ததுடன், பாடசாலை உபகரணங்களையும் விநியோகித்தனர்.
அத்தியாவசிய பாடசாலை பொருட்களை வழங்கி மாணவர்களுக்கு ஆதரவளித்ததுடன், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.