18th March 2025 17:04:41 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது 12 வது ஆண்டு நிறைவு விழாவை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 மார்ச் 11 முதல் 13 வரை பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
பண்டாரவளை, அமுனுதோவவில் உள்ள சனசும முதியோர் இல்லத்தில் படையினர் சிரமதான பணியை மேற்கொண்டதுடன், முதியோர்களுக்கு மதிய உணவு விருந்து மற்றும் இசை பொழுதுபோக்கும் வழங்கினர். இந்நிகழ்வின் நிறைவில் முகாம் வளாகத்தில் தானம் வழங்கப்பட்டது.