Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2025 21:21:41 Hours

தியபெதும சிங்கள கட்டுகெலியாவ ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் தியபெதும சிங்கள கட்டுகெலியாவ ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழஙகும் திட்டத்தை 2025 மார்ச் 13 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முயற்சிக்கான நிதி உதவியை கொமர்ஷல் வங்கி வழங்கியது.

இந்த நிகழ்வு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் வழங்கல் கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.