16th March 2025 15:46:13 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 அன்று தியதலாவை இராணுவத் தள மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயம், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை வழங்குவதற்காக மருத்துவமனையின் செயல்பாட்டை உறுதி செய்வதோடு, அதன் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இராணுவத் தளபதி தனது விஜயத்தின் போது, மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடு, அதன் மருத்துவ சேவைகள், உட்கட்டமைப்பு மற்றும் அனைத்து செயல்திறன் பற்றிய விரிவான விளக்கத்தைப் பெற்றார். சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள சுகாதார சேவையை வழங்குவதற்கு அவர்கள் தமது சேவையில் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் இராணுவத் தளபதிக்கு விளக்கமளித்தனர்.
இராணுவத் தளபதி மருத்துவ நிபுணர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள நேரம் ஒதுக்கி, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பாராட்டினார். மேலும், ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வுக்காக மருத்துவ வசதிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், நல்ல சுகாதார சேவைகளை வசதியாக அணுகுவதை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.