15th March 2025 21:38:26 Hours
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் - 2025 பரசூட் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் அம்பாறையில் உள்ள இலங்கை விமானப்படை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ஆயுதப்படைகளின் விதிவிலக்கான திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய ஒரு சிலிர்ப்பூட்டும் சாம்பியன்ஷிப்பின் உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில், பயிற்சி பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் எம்.டி.கே. விஜேவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ பாராசூட் அணி போட்டி முழுவதும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, இலங்கை விமானப்படையுடன் இணைந்து இணை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
சிறந்த செயல்திறன்
துல்லியமான பரசூட் தரையிறக்கம் – சாம்பியன்கள்
திறந்த உரு உருவாக்கம் – இரண்டாம் இடம்
சிறந்த தனிநபர் செயல்திறன்
சிறந்த ஒட்டுமொத்த பரசூட் வீரர் – பணிநிலை சார்ஜன் எஸ்.என்.ஆர். கெலும் (கெமாண்டே படையணி)
துல்லியமான பரசூட் தரையிறக்கம் – பணிநிலை சார்ஜன் எஸ்.என்.ஆர். கெலும் (கெமாண்டே படையணி) - முதலாவது இடம்
துல்லியமான பரசூட் தரையிறக்கம் – லெப்டினன் கேணல் ஜே.எச்.எஸ். புஷ்பகுமார ஆர்டபிள்யூபீ பீஎஸ்சீ (விஷேட படையணி) - 2வது இடம்