15th March 2025 13:46:54 Hours
51 வது காலாட் படைப்பிரிவு, சிவில்-இராணுவ ஒத்துழைப்புடன் உறவுகளை வலுப்படுத்தும் வகையில், தூய இலங்கை திட்டத்தின் கீழ் 2025 மார்ச் 10 ஆம் திகதி 51 வது படைப்பிரிவு சிமிக் பூங்கா மைதானத்தில் காற்பந்து போட்டியை நடாத்தியது.
சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பன்னிரண்டு அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் குயின் பிரதர்ஸ் காற்பந்து கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழ் காற்பந்து கழகம் சாம்பியன்ஷிப்பைப் பெற்றது.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.