Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2025 10:33:59 Hours

படையணிகளுக்கு இடையிலான செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 இல் விஜயபாகு காலாட் படையணி வெற்றி

இராணுவ கால்பந்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 படையணிகளுக்கு இடையிலான ஆண்கள் செபக்டக்ரா சாம்பியன்ஷிப் போட்டி 13 படையணிகளின் பங்கேற்புடன் 2025 மார்ச் 07 ஆம் திகதி பனாகொடை உள்ளக மைதானத்தில் நிறைவடைந்தது.

நடைபெற்ற தொடர் போட்டிகளின் பின்னர், இறுதிப் போட்டியில் விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் செபக்டக்ரா அணியை தோற்கடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.

இப்போட்டி இராணுவ கால்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கே.ஏ.யு. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.