13th March 2025 10:35:25 Hours
தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக 542 வது காலாட் பிரிகேட் 2025 மார்ச் 08 ஆம் திகதி மன்னார் நகர சபை மண்டபத்தில் கலாசார நடனப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. "தமிழ் கலாசார நடனத்தின் மதிப்புகள்" என்ற கருப்பொருளில் இந்த நிகழ்வு, இன மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பது, பாடசாலை பிள்ளைகளின் திறன்களை மேம்படுத்துவது மற்றும் இராணுவத்திற்கும் மன்னார் சமூகத்திற்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
மன்னார் மற்றும் மடுவைச் சேர்ந்த பதினான்கு பாடசாலை அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
54 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 542 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 4 வது கஜபா படையணி மற்றும் 8 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.