Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2025 09:31:08 Hours

இராணுவ தடகள வீரர் ஈட்டி எறிதலில் புதிய சாதனையை நிலைநாட்டி உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி

தேசிய தடகள தேர்வுப் போட்டி - 2025, தியகம மைதானத்தில் 2025 மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் ஆர்.ஏ.எஸ்.ஜே. ரணசிங்க, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 85.78 மீட்டர் தூரம் எறிந்து, 2024 ஆம் ஆண்டில் ருமேஷ் தரங்கவால் நிலைநாட்டிய 85.45 மீட்டர் சாதனையை முறியடித்தார். அவரது இந்த சாதனையால் 2025 ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

இந்த தடகள வீரர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 83.04 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்தார். 2016 ஆம் ஆண்டு குவஹாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 80.25 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம், 2019 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 74.97 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம், 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் நடந்த உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் 75.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் உட்பட பல சர்வதேச பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.