Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2025 18:48:10 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 மார்ச் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும் சிரேஷ்ட அதிகாரியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், அவரது பணிக்காலம் முழுவதும் அவருக்கு ஆதரவளிப்பதில் அவரது குடும்பத்தினர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1989 ஜூலை 14ம் திகதி பாடநெறி இல 32 இன் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1991 ஜனவரி 19ம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இராணுவ சேவைப் படையணியில் நியமிக்கப்பட்டார்.

தனது இராணுவ சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட அவர் 2023 ஓகஸ்ட் 19ம் திகதி அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். சிரேஸ்ட அதிகாரி 2025 மார்ச் 12 அன்று தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவர் இராணுவத் தலைமையகத்தில் போர் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.

தனது பணிக்காலம் முழுவதும், 1 வது விஷேட படையிணியின் குழுத் தளபதி, 1 வது விஷேட படையிணியின் அதிகாரி கட்டளை, 2 வது விஷேட படையிணியின் நிறைவேற்று அதிகாரி, 2 வது விஷேட படையிணி நிர்வாகப் படையின் அதிகாரி கட்டளை, 3 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி விநியோக குழுவின் இரண்டாம் கட்டளையாளர், கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் பணிநிலை அதகாரி 2 (வழங்கல்), வெளிஓயா 333 வது கூட்டுக்குழுவின் அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி விநியோக குழுவின் அதிகாரி கட்டளை, 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி நிர்வாக குழுவுன் அதிகாரி கட்டயை, 3 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி இரண்டாம் கட்டளையாளர், மருதானை சுயாதீன போக்குவரத்து குழுவின் அதிகாரி கட்டளை, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பதில் பணிநிலை அதிகாரி 1 (வழங்கல்), இராணுவ சேவைப் படையணி பாடசாலையின் தளபதி, 7 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி, 53 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), இராணுவத் தலைமையக வி்டுதி மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் கேணல் (விடுதி), இலங்கை இராணுவ சேவை படையணி தலைமையகத்தின பிரதித் தளபதி, இராணுவத் தலைமையகத்தில் நலன்புரி பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பிரிகேடியர் (நிர்வாகம் மற்றும் விடுதி), இராணுவத் தலைமையகத்தில் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர், பராமரிப்புப் பகுதியின் தளபதி (வட மத்திய) ஆகிய பதவிகளை வகிதுள்ளதுடன் தற்போது இராணுவத் தலைமையகத்தில் போர் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாவும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.

அவரது போர்க்களத்தில் துணிச்சலைப் பாராட்டி ரண சூர (RSP) பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில், விஷேட படையணியின் அடிப்படை பாடநெறி, அடிப்படை பாராசூட் பாடநெறி, அடிப்படை கணினி பாடநெறி மற்றும் படையணி நிருவாக அதிகாரிகள் பாடநெறி உள்ளிட்ட இலங்கை பாடநெறிகளையும், இந்தியாவில் இராணுவ சேவை படையணி இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் கொமாண்டோ பாடநெறி, பாகிஸ்தானில் மேம்பட்ட பெட்ரோலியப் பாடநெறி, இந்தியாவில் இராணுவ சேவை படையணி குழு தளபதி பாடநெறி மற்றும் இந்தியாவில் இராணுவ சேவை படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் பாடநெறி ஆகிய வெளிநாட்டு கற்கைகளையும் பயின்றுள்ளார்.