06th March 2025 16:28:21 Hours
கண்டி நாலந்த பௌத்த கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 4 ஆம் திகதி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
வருகை தந்த தளபதியை, நாலந்த பௌத்த கல்லூரியின் பணிப்பாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர் மற்றும் அதிபர் வண. கலாநிதி கடகும்பூரே தம்மாராம தேரர் ஆகியோர் வரவேற்றனர். மேலும் பாடசாலை இசைக்குழு தளபதியை வரவேற்றது.
விருது வழங்கும் நிகழ்வின் போது, சிறந்த வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் அவர்களின் விளையாட்டுத் திறனை அங்கீகரித்து பரிசுகளை வழங்கினார்.