Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2025 13:49:12 Hours

சுவர்ணமாலி மகளிர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் 11 வது படைபிரிவு தளபதி பங்குபற்றல்

கண்டி சுவர்ணமாலி மகளிர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2025 பெப்ரவரி 28 அன்று போகம்பர மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபரின் அழைப்பை ஏற்று 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மாணவர்கள் தங்கள் திறமைகளையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தும் பல்வேறு தடகளப் போட்டிகள் அன்றைய நிகழ்வுகளில் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளுக்கு பின்னர், மாணவர்களுக்கு உரையாற்றிய பிரதம அதிதி, கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிலும் சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபடுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

வெற்றியாளர்களுக்கு அவர்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதம அதிதி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.