Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2025 08:34:21 Hours

நாடளாவிய பாடசாலை மறுசீரமைப்பு திட்டம் இலுக்கோவிற்ற ஆரம்ப பாடசாலையில் ஆரம்பம்

“தூய இலங்கை” திட்டத்தின் கீழ் 1,000 நாடளாவியரீதியில் பாடசாலை மறுசீரமைப்பு திட்டம் இன்று (பெப்ரவரி 20) மேமா/ஹோ/ இலுக்கோவிற்ற ஆரம்ப பாடசாலையில் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் உத்தியோகபூர்வமாகத் ஆரம்பமானது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு பாரம்பரிய மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு தொடங்கியது. திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதிபர் திரு. வசந்த உதயசிறி வரவேற்பு உரை நிகழ்த்தினார். பின்னர் இராணுவத் தளபதி அடிக்கல் நாட்டினார், இத் திட்டம் பொறியியல் சேவை படையணியின் படையினரால் மேற்கொள்ளப்படுவதுடன் புதுப்பித்தல் பணிகளின் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.