20th February 2025 10:35:12 Hours
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் "தூய இலங்கை" திட்டத்தின் பயிற்சியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி திட்டம் 2025 பெப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடத்தப்படுகின்றது.
அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) அவர்களின் வரவேற்பு உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியின் அறிமுக உரை நடைபெற்றது, அதில் அவர் "தூய இலங்கை" திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தொடக்க அமர்வைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யபட்டிருந்த சிறப்பு பயிற்சி குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இரண்டு நாள் பயிற்சித் திட்டம் ஆரம்பமாகியது. பயிற்சி அமர்வுகளில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 135 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
(புகைப்படம்: பாதுகாப்பு அமைச்சு)