Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2025 10:22:48 Hours

பல்லேகலையில் நடைபெற்ற செங்கடகல விரு நாத மற்றும் ரங்கசோபா இறுதிப் போட்டி

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளிலிருந்து சிறந்த பாடகர், சிறந்த நடனக் கலைஞர் மற்றும் மிகவும் திறமையான இராணுவ/பொது அறிவு பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ‘செங்கடகல விரு நாத மற்றும் ரங்கசோபா’ இறுதிப் போட்டி 2025 பெப்ரவரி 13, அன்று பல்லேகலை மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

11 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளைப் கீழ் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.