17th February 2025 10:17:23 Hours
தொடர்ச்சியாக 58 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 16) காலை இராணுவத் தலைமையக நுழைவாயிலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் முன்னிலையில் ஆரம்பமாகியது.
பத்தரமுல்லையிலிருந்து பனாகொடை இராணுவ வளாகம் வரை சுமார் 22 கிலோமீற்றர் வரையிலான இந்த மரதன் ஓட்ட போட்டியில் 21 படையணிகளைச் சேர்ந்த, 22 வீராங்கனைகள் உட்பட 111 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். இலங்கை இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ பீஎஸ்சீ எச்டிஎம்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 6.00 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியானது, தியத்தஉயன, பத்தரமுல்ல, மாலபே, அதுருகிரிய மற்றும் ஹபரகட ஊடாக பனாகொடை இராணுவ உடற்பயிற்சி கூடத்திற்கு அருகில் முடிவடைந்தது.
இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியும், இராணுவ தடகளக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இறுதிக் கோட்டில் வீரர்களை வரவேற்பதற்காக கூடியிருந்தனர். மேலும் ஏராளமான விளையாட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
வீதி ஓட்ட போட்டியில் சாதனை படைத்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு;
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்
(ஆண்கள் பிரிவு) - இலங்கை பீரங்கிப் படையணி
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் (பெண்கள் பிரிவு) - இலங்கை இராணுவ பொது சேவை படையணி
ஆண்கள் பிரிவு
முதலாம் இடம் - இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய் எம்.எஸ்.ஏ. பெர்னாண்டோ
இரண்டாம் இடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.டி.எஸ்.டி. குணசேகர
மூன்றாம் இடம் - இலங்கை சிங்க படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.ஜி.வி.டி காரியவசம்
பெண்கள் பிரிவு
முதலாம் இடம் - இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.எம்.சி.எஸ். ஹேரத்
இரண்டாம் இடம் - இலங்கை சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ.எம்.என் நிதர்ஷனி
மூன்றாம் இடம் - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ.எஸ்.என். பண்டார