Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2025 11:58:14 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 60 வது தளபதியாக 2025 பெப்ரவரி 13 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

சம்பிரதாய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, புதிய தளபதி மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடப்ளியூவீ அவர்களின் நினைவிடத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருக்கு இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரி உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்று நட்டியதுடன், படையினருக்கு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.