15th February 2025 08:41:05 Hours
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எல்.சி.கே. பத்திரண ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ ஐஜி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 14 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும் ஒரு துப்பாக்கி ஏந்திய அதிகாரியாக சிரேஷ்ட அதிகாரியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், அவரது பணிக்காலம் முழுவதும் அவருக்கு ஆதரவளிப்பதில் அவரது குடும்பத்தினர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார்.
பதிலுக்கு மேஜர் ஜெனரல் எல்.சி.கே. பத்திரண ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ ஐஜி அவர்கள் இராணுவத் தளபதி தனது பதவிக் காலம் முழுவதும் வழங்கிய வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் எல்.சி.கே. பத்திரண ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ ஐஜி அவர்கள் 1991 நவம்பர் 17ம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி பாடநெறி 08 இல் நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். அவர் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1993 நவம்பர் 22 அன்று இலங்கை பீரங்கி படையணியில் இரண்டாம் லெப்டினன்னாக நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் தனது சேவையின் போது அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட அவர் 2025 ஜனவரி 18 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 பெப்ரவரி 17 அன்று தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் பணிப்பாளர் நாயகமாக (நிர்வாகம்) பணியாற்றி வருகின்றார்.
தனது பணிக்காலத்தில், 7 வது இலங்கை இலகு பீரங்கி படையணியின் படை தலைவர் (கஜசிங்கபுர), 7 வது இலங்கை இலகு பீரங்கி படையணியின் படை தலைவர் (மன்னார்), 7 வது இலங்கை இலகு பீரங்கி படையணியின் 25வது குழுவின் குழு கெப்டன், 212 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் குழு கட்டளையாளர், 7வது இலங்கை களப் பீரங்கி படையணியின் 25 வது குழுவின் பதில் கட்டளையாளர், 8 வது இலங்கை நடுத்தர பீரங்கி படையணியின் நிறைவேற்று அதிகாரி, 8 வது இலங்கை நடுத்தர பீரங்கி படையணியின் 24வது குழுவின் கட்டளையாளர், 8 வது இலங்கை நடுத்தர பீரங்கி படையணியின் 83வது குழுவின் கட்டளையாளர், 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையக பீரங்கி ஒருங்கிணைப்பாளர், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயிற்சிப் பிரிவின் படைத் தலைவர், 571 வது காலாட் பிரிகேட் தலைமையக குழு கட்டளையாளர், 15 வது இலங்கை களப் பீரங்கி படையணியின் பதில் கட்டளை அதிகாரி, 15 வது இலங்கை களப் பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), 68 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), பீரங்கி படையணி தலைமையகத்தில் எதிர் குண்டுவீச்சு அதிகாரி, இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 62 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 7 வது இலங்கை இலகு பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி, 53 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), பீரங்கி பாடசாலையின் பதில் தளபதி, இராணுவத் தலைமையகத்தில் தளபதி செயலக பிரிகேடியர் (தளபதி செயலகம்) மற்றும் அவர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் பணிப்பாளர் (நிர்வாகம்) ஆகிய பதவிகளை வகிதுள்ளதுடன் தற்போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் பணிப்பாளர் நாயகமாக (நிர்வாகம்) பதவி வகிக்கின்றார்.
யுத்தத்தின் போது அவரது துணிச்சலைப் பாராட்டி, சிரேஷ்ட அதிகாரிக்கு ரண சூர பதக்கம் (ஆர்எஸ்பீ) வழங்கப்பட்டது.
தனது இராணுவ வாழ்க்கையில், கனிஷ்ட கட்டளை பாடநெறி, அடிப்படை பரசூட் பாடநெறி, சாத்தியமான இராணுவ கண்காணிப்பாளர் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் அரச கலந்துரையாடலில் கூட்டத்திற்கான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகள் பாடநெறி. இளங்கலை அதிகாரி (பீரங்கி) பாடநெறி பாகிஸ்தான், மத்திய தொழிலாண்மை பாடநெறி பாகிஸ்தான், நீண்ட பீரங்கி பணிநிலை பாடநெறி (வான் பாதுகாப்பு) இந்தியா, பீரங்கி படையலகு கட்டளையாளர் பாடநெறி சீனா மற்றும் உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி இந்தியா உள்ளிட்ட ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச படநெறிகளை அவர் கற்றுள்ளார்.
மேலும், சிரேஷ்ட அதிகாரி அகில இந்திய முகாமைத்துவ சங்கத்தில் முகாமைத்துவ உயர் பாடநெறி இந்தியா, பீரங்கி பாடசாலையில் பீரங்கிப் பயிற்சி பாநெறி பாகிஸ்தான், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுகலைப் பட்டம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் இளங்கலை கலை (பாதுகாப்பு ஆய்வுகள்), இந்தியா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பாடநெறியில் முதுகலைப் பட்டம் மற்றும் இந்தியா இராணுவ வான் பாதுகாப்பு கல்லூரியில் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ளார்.