11th February 2025 21:25:55 Hours
தென் சூடான் நிலை 2 மருத்துவமனையில், 9 அதிகாரிகள் மற்றும் 42 சிப்பாய்களை கொண்ட தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை அமைதி காக்கும் 10 வது குழு ஒரு வருட பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் 2025 பெப்ரவரி 11, அன்று இலங்கைக்கு வருகை தந்தது. ஏனைய 07 அதிகாரிகள் மற்றும் 05 சிப்பாய்கள் தென் சூடானில் தங்கியிருப்பதுடன், அவர்கள் கடமைகளை முடித்த பின்னர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகை தந்த, தென் சூடானில் உள்ள நிலை 2 மருத்துவமனையின் 10வது குழுவின் படையினரை இராணுவ மருத்துவப் படையணியின் நிலைய தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏயூஎஸ் வனசேகர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ, போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர், மற்றும் இலங்கை இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அன்புடன் வரவேற்றனர்.
ஒரு வருட பணிக்காலத்தில், தென் சூடானில் உள்ள நிலை 2 மருத்துவமனையின் 10வது குழுவின் படையினர் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், ஐ.நா. சுகாதாரத் தரத்தை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்வதற்கும், நோயாளி பாதுகாப்பில் வலுவான முக்கியத்துவத்தை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளனர்.