11th February 2025 10:26:16 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 241 வது காலாட் பிரிகேட் படையினர், அக்கரைப்பற்று வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 பெப்ரவரி 6 ஆம் திகதி அக்கரைப்பற்று மாநகர சபை அதாவுல்லா மண்டபத்தில் இரத்த தான நிகழ்வை நடாத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் 241 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.