06th February 2025 23:29:30 Hours
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சீ.கே வனசிங்க ஆர்.எஸ்.பீ யூ.எஸ்.பீ, அவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 06 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு பணிக்காலம் முழுவதும் வழங்கி ஒத்துழைப்பினையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சீ.கே வனசிங்க ஆர்.எஸ்.பீ யூ.எஸ்.பீ, அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக விசேட பாராட்டுச் சின்னமும், அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சீ.கே வனசிங்க ஆர்.எஸ்.பீ யூ.எஸ்.பீ, அவர்கள் 1990 செப்டெம்பர் 07 ம் ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி எண் 2 இன் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1991 மார்ச் 13 ம் திகதி கஜபா படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். பின்னர், 2007 பெப்ரவரி 04, அன்று இயந்திரவியல் காலாட் படையணிக்கு மாற்றப்பட்டார். இராணுவத்தில் தனது சேவையின் போது அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட அவர் 2023 ஒக்டோபர் 16, அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 பெப்ரவரி 10 அன்று தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவர் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாகவும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
அவரது பணிக்காலத்தில், 4வது கஜபா படையணியின் குழு தளபதி, 4வது கஜபா படையணியின் அதிகாரி கட்டளை, போர் பயிற்சிப் பாடசாலையின் பணி நிலை அதிகாரி 2 (பயிற்சி), கஜபா படையணியின் பணநிலை அதிகாரி 2 (வழங்கல்), 534 வது காலாட் பிரிகேட் மேஜர் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), 3வது இயந்திரவியல் காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 4வது இயந்திரவியல் காலாட் படையணியின் பதில் கட்டளை அதிகாரி, 3வது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, குகுலேகங்க லாயா ஓய்வு விடுதியின் பணி நிலை அதிகாரி 1, கம்புருபிட்டிய அபிமன்சல 2 இன் தளபதி, மாகம் ருஹுனுபுர சர்வதேச மாநாட்டு மையத்தின் பணிப்பாளர் (செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம்), இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் பிரதி நிலைய தளபதி, 58 காலாட் படைப்பிரிவின் கேணல் பொது பணி 591வது காலாட் பிரிகேட்டின் பதில் தளபதி, இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி, மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தில் பிரிகேடியர் பொது பணி, இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இயந்திரவியல் காலாட் படையணி படைத் தளபதி போன்ற பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.
எதிரியை எதிர்கொள்வதில் அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் சிரேஷ்ட அதிகாரிக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டது. அவரது சிறப்பான, புகழ்பெற்ற மற்றும் விசுவாசமான சேவைக்காக, அவருக்கு உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தனது இராணுவ வாழ்க்கையில், பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, படையலகு உதவி ஆயுத அதிகாரிகள் பாடநெறி, சிவில் விவகார பாடநெறி, விளையாட்டு நிர்வாகிகள் பாடநெறி, ஐக்கிய நாட்டு அமைதி நடவடிக்கை முயற்சி – சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறி, பாகிஸ்தான் அடிப்படை பயிலிளவல் பாடநெறி, பாகிஸ்தான் இளம் அதிகாரிகளின் தந்திரோபாய பாடநெறி, பங்களாதேஷ் அதிகாரிகள் ஆயுத பாடநெறி, ரஷ்யா காலாட் படையலகு கட்டளை பாடநெறி (மோட்டார்ஸ்டு காலாட்படை), இந்தியா கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகளின் பொதுமக்கள் பாதுகாப்பு பாடநெறி உள்ளிட்ட பல உள்ளூர் மற்றும் சர்வதேச பயிற்சி பாடநெறிகளை அவர் பயின்றுள்ளார்.
மேலும், கோல்டன் கீ இன்ஸ்டிடியூட் ஒப் இன்பமேஷன் டெக்னாலஜி லிமிடெட்டில் கணினி வன்பொருளில் பாடநெறி, ருஹுன பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆலோசனையில் பாடநெறி, மேற்கு லங்கா ஹோட்டல் பாடசாலையில் விருந்தோம்பல் முகாமைத்துவ பாடநெறி, மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய நிலைய பாடநெறி இராஜதந்திர பாடநெறி மற்றும் ருஹுன பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் போன்ற உயர் கல்விகளை சிரேஷ்ட அதிகாரி பெற்றுள்ளார்.