Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th February 2025 23:28:20 Hours

இராணுவத் தளபதி அனுராதபுரத்தில் பிக்குகள் மற்றும் புனித தலங்களில் ஆசீர்வாதம் பெறல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் இணைந்து 2025 பெப்ரவரி 5, அன்று ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாய உள்ளிட்ட புனித தலங்களில் வழிப்பாடுகளில் ஈடுப்பட்டதுடன் மதகுருமார்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்று கொண்டார்.

அட்டமஸ்தானாதிபதியும் நுவர பிரதேச பிரதம சங்கநாயக்க தேரருமான வண. பல்லேகம ஹேமரத்ன தேரர் அவர்களை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பிரதம சங்கநாயக்கரும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் பிரதம விகாராதிபதியுமான அதிவண. நுகேதென்ன பஞ்சானந்த நாயக்க தேரர் மற்றும் ருவன்வெலி மகா சேய பிரதம தேரர் வண. ஈத்தலவெட்டுனுவெவ ஞானதிலக்க தேரர் ஆகியோரையும் சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுகொண்டார்.

பின்னர் இராணுவத் தளபதி மற்றும் அவரது துணைவியர் புனித ஜய ஸ்ரீ மகா போதி, ருவன்வெலி மகா சேய மற்றும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விஹாரையில் காணிக்கைகளை செலுத்தினர். அங்கு மகா சங்க உறுப்பினர்களால் இராணுவத் தளபதிக்கு ஆசீர்வாதம் வேண்டி பிரார்த்தனைகள் (அனுஷாசனம்) இடம்பெற்றன.

இந்த விஜயத்தின் போது, தளபதி அவர்கள் அனுராதபுரம் மறைமாவட்டத்தின் அருட்தந்தை வண. நோர்பர்ட் எம். அண்ட்ராடி ஓஎம்ஐ அவர்களை சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்த மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டார்.