Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th February 2025 23:27:01 Hours

இராணுவத் தளபதி ‘அபிமன்சல 3’ போர் வீரர்களை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் புதன்கிழமை (பெப்ரவரி 5) பாங்கொல்லை அபிமன்சல 3 நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.

வருகை தந்த பிரதம விருந்தினருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நுழைவாயிலில் வாகனம் தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், நல விடுதியிலுள்ள இரண்டு போர் வீரர்கள் இராணுவத் தளபதியை ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் வரவேற்றனர்.

பின்னர், இராணுவத் தளபதி, வருகை தந்தவர்களுடன் இணைந்து, வளாகத்தில் அமைந்துள்ள விடுதிகள், மருத்துவமனை, டிபிஎம் ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் அபிமான் ஷில்பா பியாச ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதியும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி நல விடுதியிலுள்ளவர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினார்.

பின்னர், அன்றைய விஜயத்தை நினைவூட்டும் வகையில், நல விடுதியின் இரண்டு போர் வீரர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கைவினைப் பொருளையும் ஒரு ஓவியத்தையும் இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோருக்கு வழங்கினர்.

புறப்படுவதற்கு முன், இராணுவத் தளபதி நலவிடுதியிலுள்ளவர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன் அதிதிகள் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக்களை பதிவிட்டார்.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 57 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, போர்வீரர்கள் விவகார மற்றும் புணர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஏஎஸ்ஆர் விஜயதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, அபிமன்சல 3 நல விடுதியின் தளபதி பிரிகேடியர் ஜீஆர்எஸ் தர்மரத்ன யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.