Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2025 12:45:10 Hours

2 வது விஷேட படையணியினால் தெற்காசியாவில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் குறித்த கருத்தரங்கு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் "தெற்காசியாவில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு 2025 ஜனவரி 31 ஆம் திகதி 2 வது விஷேட படையணி தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தற்போதைய நிலைமைகள், எதிர்கால அச்சுறுத்தல்கள் மற்றும் இலங்கையின் பாதுகாப்பில் அவற்றின் தாக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 59 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அனைத்து விஷேட படையணிகளைச் சேர்ந்த மொத்தம் 75 அதிகாரிகள் இந்த நிகழ்வில் நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் பங்கேற்றனர். முக்கிய பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில் விஷேட படையணி அதிகாரிகளின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்துவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.