Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2025 18:33:58 Hours

77 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்

      • "தேசிய மறுமலர்ச்சியில் இணைவோம்" என்ற கருப்பொருளில்

      • ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் வளர்க்கும் சர்வ மத நிகழ்வுகள்

      • பொதுமக்களுக்கு சீரான போக்குவரத்து வசதியை உறுதி செய்வதற்காக சிறப்பு போக்குவரத்து திட்டம்.

"77 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தேசத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும்" என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ ஏஎச்எம்எச் அபயரத்ன அவர்கள் இன்று (ஜனவரி 30) தெரிவித்தார். அதிமேதகு "ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் குடிமக்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதை உறுதி செய்யும் அதே வேளையில், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலை நிறுவுவதற்கான முயற்சிகளின் தொடக்கத்தைக் குறிக்கின்றது".

"77 வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ‘2025 பெப்ரவரி 4 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன’ என்று தெரிவித்தார்.

"நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கும் வகையில், அதிக பொதுமக்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

"செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) அவர்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வான அணிவகுப்பில், கடந்த வருடத்தை விட இராணுவ வீரர்களின் பங்கேற்பு 40% குறையும் என்று கூறினார்.

""இந்த ஆண்டு அணிவகுப்பில் இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் மட்டுமே பங்கேற்கும், அதே நேரத்தில் அணிவகுப்பில் இராணுவ வாகனங்கள் எதுவும் சேர்க்கப்படாமல், அணிநடை வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் நாட்டுக்கு பாரம்பரிய 25-துப்பாக்கி வேட்டு மரியாதை செலுத்தும்" என்று அவர் கூறினார்.

"ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள், சுதந்திர தின கொண்டாட்டங்களில் இலங்கை இராணுவத்தின் 1,307 பேரும் இலங்கை கடற்படையின் 725 பேரும் இலங்கை விமானப்படையின் 521 பேரும் இலங்கை பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப் படையின் 505 பேரும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 182 பேரும் தேசிய மாணவச் சிப்பாய்கள் 500 பேரும் அணிநடை மரியாதையில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

"ஒத்திகை மற்றும் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வு முடியும் வரை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப் படையின் 1,650 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்தார்.

"ஒத்திகைகள் மற்றும் பிரதான விழா இரண்டும் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, பொது போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல், சிறப்பு போக்குவரத்து திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட அவர்கள் தெரிவித்தார்.

"மேற்கூறியவற்றைத் தவிர, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, மேலதிக செயலாளர் (உள்நாட்டு விவகாரங்கள்) ஏஜி நிஷாந்த மற்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்எஸ்கேஜே பண்டார ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

" (செய்தி: பாதுகாப்பு அமைச்சு)