29th January 2025 05:53:54 Hours
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி அதன் மதிப்புமிக்க சுவரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை நடத்தியது.
வருகை தந்த இராணுவத் தளபதியை, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் வரவேற்றார். பின்னர், முப்படையினரால் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், இராணுவத் தளபதி புகழ்பெற்ற இராணுவத் தலைவர்களின் மதிப்புமிக்க குழுவில் இணைந்துக்கொள்ளும் பொருட்டு தனது சுயவிவரத்தை புகழ்மிக்க சுவரில் திரைநீக்கம் செய்தார். அதனை தொடர்ந்து, 19வது பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறியில் கலந்து கொண்ட அதிகாரிகளிக்கு அவர் உரையாற்றினார். பங்கேற்பார்களில் 125 உள்நாட்டு அதிகாரிகளும், நட்பு நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டு அதிகாரிகளும் இருந்தனர்.
இராணுவத் தளபதி தனது உரையின் போது விலைமதிப்பற்ற அனுபவங்களையும் அறிவுகளையும் பகிர்ந்து கொண்டு பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தியதுடன் தொழில்முறை இராணுவக் கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
பாராட்டு தெரிவிக்கும் விதமாக, கல்லூரி தளபதி, இராணுவத் தளபதிக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். பதிலுக்கு, தளபதி கௌரவத்திற்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தின் போது, இராணுவத் தளபதி பாடநெறி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடியதுடன் வழிகாட்டுதலை வழங்கி, நட்புறவை வளர்த்துக் கொண்டார். விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் நிகழ்வைப் பற்றிய தனது எண்ணங்களையும் அவர் பதிவு செய்தார்.
அன்றைய நிகழ்வின் இறுதி நிகழ்வாக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரிக்கு தனது வருகையினை நினைவு கூறும் விதமாக படங்களை எடுத்துகொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.